ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம்; மத்திய உள்துறை அமைச்சகம்

ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-01-21 01:28 GMT
புதுடெல்லி,

நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்குச் செல்லும் இந்தியர்கள், பாஸ்போர்ட், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வைத்திருந்தால், அவர்கள் விசா பெற வேண்டியதில்லை. தற்போது, ஆதார் அட்டையையும் பயண ஆவணமாக வைத்துக்கொள்ளலாம். 

இதற்கு முன்பு, 15 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஓட்டுநர் உரிமம், நிரந்தர வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை ஆகியவற்றை அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். ஆதார் அட்டை ஆவணமாக சேர்க்கப்படவில்லை. எனினும், 15 முதல் 65 வயதுக்கு உள்பட்டவர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்