மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-01-27 05:39 GMT
சேனாபதி,

மணிப்பூரின் சேனாபதி நகரில் இன்று காலை 10.19 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.  இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்