நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா காவல் துறை ஆணையரிடம் சிபிஐ இன்று விசரணை

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஆணையரிடம் சிபிஐ இன்று விசரணை நடத்துகிறது.

Update: 2019-02-09 01:06 GMT
கொல்கத்தா, 

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் போராட்டம் நடத்தினார். இதனால் ராஜீவ் குமாரை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டை சி.பி.ஐ. நாடியது.

விசாரணை முடிவில், ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று (பிப்.9) ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. 

மேலும் செய்திகள்