கடவுள் ராமர் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மூதாதையர் ஆவார் -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து

ராமர் கோவிலை மெக்கா மதினாவில், வாடிகனிலா கட்டமுடியும்? என யோகா குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-09 07:32 GMT
புதுடெல்லி

அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராம்தேவ் கூறும்போது:-

அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு  அவருக்கு கோவில் கட்டப்படவில்லை என்றால், மெக்கா, மதினாவில், வாடிகனிலா கட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினார். அயோத்தி ராமரின் பிறந்த இடம் மற்றும் ராம் இந்துக்களின் மூதாதையர் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு மூதாதையராக உள்ளார் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல வாக்கு வங்கியாகும்.

அரசியலமைப்பை நாங்கள் மதிக்கிறோம், பாராளுமன்றம் சில வழிகளைக் கண்டறிய வேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் சில வழிகளைக் கண்டறிய வேண்டும். அயோத்திக்கு இந்துக்கள் கூட்டாக அணிவகுத்து சென்று ராம் கோவில் கட்டலாம், ஆனால் அந்த விஷயத்தில் நாடு முழுவதும் சட்ட ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்