சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இணைந்த பிரியங்கா காந்தி

சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இணைந்த ஒரு சில மணிநேரத்தில் பிரியங்கா காந்தியை 64 ஆயிரத்து 200 பேர் பின்தொடர்ந்து உள்ளனர்.

Update: 2019-02-11 10:18 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.  இவரது சகோதரி பிரியங்கா காந்தி (வயது 47).  கடந்த வாரம் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.  அவருடன் உத்தர பிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிரியங்கா உத்தர பிரதேசத்திற்கு இன்று முதன்முறையாக சென்றார்.  அவர், சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இணைந்து உள்ளார்.  இதுவரை பதிவு எதனையும் வெளியிடவில்லை.  தனது சகோதரரான ராகுல் காந்தி, கட்சி தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட், அசோக் கெலாட், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, அகமது பட்டேல் மற்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கு ஆகிய 7 பேரை அவர் பின்தொடருகிறார்.

டுவிட்டரில் இணைந்த ஒரு சில மணிநேரத்தில் பிரியங்கா காந்தியை 64 ஆயிரத்து 200 பேர் பின்தொடர்ந்து உள்ளனர்.

ராகுல் காந்தியும் ஆளும் அரசை தாக்கும் வகையில் டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.  அவர் மக்களிடையே தனது தோற்றத்தினை வலுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருவதற்கு அரசியல் நிபுணர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்