தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் தேதியை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரணைக்கு ஏற்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-04 07:32 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இதற்கிடையில், பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர்   ஆகியவை வரும் புனித வாரத்தில் தேர்தல் நடைபெறுவதால், பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், எனவே, தமிழகத்தில் ஏப்.18-ம் தேதி தேர்தல் நடத்தாமல், வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரி கிறிஸ்தவ  அமைப்பு  ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், நீங்கள் எவ்வாறு பிரார்த்தனை நடத்த வேண்டும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று எந்த அறிவுரையையும் நாங்கள் கூறப்போவது இல்லை . வாக்கினை பதிவு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்.” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தங்களின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் இதன்காரணமாகவே உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும், இந்த மனுவை விசாரிப்பதில் எந்த அவசரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்