தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2019-04-23 05:48 GMT
புதுடெல்லி,

64 வயதான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் (வயது 35) ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண், சுப்ரீம் கோர்ட்டின் 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். இது ஊடகங்களுக்கு தெரிய வந்து பரபரப்பு செய்தி ஆனது. தன் மீதான குற்றச்சாட்டை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார். 

இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உஸ்தவ் பெய்ன்ஸுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்