பக்ரீத் பண்டிகையில் பலியிட இருந்த 7 ஒட்டகங்கள் மீட்பு

பக்ரீத் பண்டிகையில் பலியிட இருந்த 7 ஒட்டகங்கள் மீட்கப்பட்டன.

Update: 2019-08-13 20:10 GMT
வாரணாசி,

உ.பி. மாநிலம் வாரணாசி மற்றும் ஜான்பூர் நகரங்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஒட்டகங்களை பலி கொடுப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ மற்றும் சமூக நல ஆர்வலர்கள், அரசு அதிகாரிகளுடன் இணைந்து அந்த ஒட்டகங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வாரணாசியில் 5 ஒட்டகங்களும், ஜான்பூரில் 2 ஒட்டகங்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கபட்டன என்று ‘பீட்டா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மீத் அசார் தெரிவித்தார்.

ஒட்டகங்களை மீட்க ஒத்துழைப்பு கொடுத்த அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த நிகழ்வின் மூலம் ஒட்டகங்களை போல் மற்ற விலங்குகளை பலியிடுவதையும் உண்பதையும் மக்களே தடுக்க முன்வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்