உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.

Update: 2019-09-04 09:53 GMT
அகமதாபாத்,

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார்.

இன்று காலை அங்குள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு அமித் ஷா  சென்றார். சில பரிசோதனைகளுக்கு பின்னர் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

மேலும் செய்திகள்