மராட்டியத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றே பாஜகவினர் விரும்புகின்றனர் : பாஜக மந்திரி தகவல்

மராட்டியத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றே பாஜகவினர் விரும்புவதாக பாஜக மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-04 11:21 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை.

தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170  எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்  அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி  வருகிறது.

இதனால், மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த  நிலையில், மராட்டியத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றே பாஜகவினர் விரும்புவதாக  பாஜக மந்திரி ஜெயகுமார் ராவல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்