கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் வெளியிட்டவர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2020-03-09 01:12 IST
இடாநகர்,

அருணாசலபிரதேச மாநிலம் கிழக்கு சியாங் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபு கேனா செரிங். இவர், கொரோனா வைரஸ், அருணாசலபிரதேசத்தின் பசிகாட் பகுதிக்கு பரவி விட்டதாகவும், 2 நோயாளிகள் அசாம் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அது தவறான செய்தி என்பதால், அவருக்கு எதிராக மாவட்ட மருத்துவ அதிகாரி கலிங் டாய், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சுபு கேனா செரிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மேலும் செய்திகள்