அடுத்த ஆண்டு முதல் நாப்கின்களை அப்புறப்படுத்த பாக்கெட்டுகளில் பைகள்: மத்திய மந்திரி தகவல்

அடுத்த ஆண்டு முதல் நாப்கின்களை அப்புறப்படுத்த பாக்கெட்டுகளில் பைகள் வைக்கப்படும் என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-08 20:42 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்காக நடந்த மகளிர் தின விழாவில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை பயன்படுத்திய பிறகு பாதுகாப்பாக அப்புறப்படுத்த அதன் பாக்கெட்டுகளில் மக்கும் வகையிலான பைகளை வைக்கவில்லை என எனக்கு தெரியவந்துள்ளது. எனவே பைகள் வைக்கும் நடைமுறையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு கட்டாயமாக்கும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இதுவரை நகராட்சி பகுதிகளில் உள்ள தூய்மை விதிமுறைகள் இனி கிராமங்களுக்கும் பொருந்தும்’ என்றார்.

மேலும் செய்திகள்