இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆனது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,071 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும் அதிகரித்தது.

Update: 2020-03-31 00:10 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,071. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 49 பேர். பலியானவர்கள் 29 பேர். தீவிர பாதிப்பு உள்ளவர்கள் 942 பேர், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 99 பேர்.

மராட்டிய மாநிலத்தில் புதிதாக இறந்த 2 பேரையும் சேர்த்து அங்கு அதிகபட்சமாக 8 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 5 பேரும், கர்நாடகத்தில் 3 பேரும், மத்தியபிரதேசம், டெல்லி, காஷ்மீரில் தலா 2 பேரும், கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார், மேற்குவங்காளம், பஞ்சாப், இமாசலபிரதேசத்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

கேரளாவில் அதிகபட்சமாக 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 193 பேர், கர்நாடகாவில் 80 பேர், உத்தரபிரதேசத்தில் 75 பேர், தெலுங்கானாவில் 69 பேர், தமிழ்நாட்டில் 67 பேர், குஜராத்தில் 58 பேர், ராஜஸ்தானில் 57 பேர், டெல்லியில் 53 பேர், பஞ்சாபில் 38 பேர், அரியானா, மத்தியபிரதேசத்தில் 33 பேர், காஷ்மீரில் 31 பேர், ஆந்திரா, மேற்குவங்காளத்தில் 19 பேரும், புதுச்சேரியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்