சர்வதேச விமான பயணிகள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க கர்நாடகா வலியுறுத்தல்

கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-02-16 19:35 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு என சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து பாதிப்புகள் காணப்படுகின்றன.  இதனை முன்னிட்டு கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் 72 மணிநேரத்திற்கு மிகாமல் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து கடந்த 2 வாரங்களில் கர்நாடகாவிற்கு வந்தவர்கள் அனைவரும் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்வதேச விமான பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாலும், இல்லையென்றாலும் அவர்கள் கர்நாடகாவிற்குள் நுழைவதற்கு முன் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து, அவற்றில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா தடுப்புக்கான விதிமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தனது உத்தரவில் கர்நாடகா அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்