பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-02-21 17:01 GMT
ஸ்ரீநகர்,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போல பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் இருப்பது உண்மைதான். பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினால் அது தவறானது. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால் நாம் கண்டிப்பாக நமது அண்டை நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  நண்பர்களை மாற்றலாம் அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்ற வாஜ்பாயின் கூற்று எனக்கு நினைவில் உள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்