2.6 கோடி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்; கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனாவின் கோரப்பிடியில் டெல்லி சிக்கித்தவிக்கிறது.

Update: 2021-05-09 03:02 GMT
இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “டெல்லியில் அனைவருக்கும் போடுவதற்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வேண்டும். 40 லட்சம் டோஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மாதம் ஒன்றுக்கு 85 லட்சம் தடுப்பூசி என்ற அளவில் மத்திய அரசு வினியோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் நாள்தோறும் 1 லட்சம் டோஸ் போடப்படுவதாகவும், இதை 3 லட்சமாக உயர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்