கர்நாடகத்தில் இன்று 25,346 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடக மாநிலத்தில் தற்போது 2,68,275 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2021-06-05 22:46 IST
ஐதராபாத்,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 13,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,83,314 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 365 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,260 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 25,346 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,83,758 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 2,68,275 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்