கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-06-16 07:03 GMT
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஸ்புட்னிக்-வி பயன்பாட்டில் உள்ளன.

கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளின்  கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என சீரம் இந்தியாவும், பாரத் பயோடெக் நிறுவனமும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதையை அரசு கொள்முதல் விலை டோசுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உள்ளது. ஆனால் இந்த விலை கட்டுப்படியாகக்கூடியது இல்லை என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தடுப்பூசி உற்பத்திக்கான முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளதால் விலையை உயர்த்தி தருமாறு அவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் நீடிக்கும் நிலையில் இந்த கோரிக்கையை அரசு ஏற்குமா என தெரியவில்லை.

மேலும் செய்திகள்