கையால் ரிப்பனை பிடித்து இழுத்து குடியிருப்பை திறந்து வைத்த தெலுங்கானா முதல்-மந்திரி
தெலுங்கானாவின் ராஜண்ணா ஸ்ரீசீலா மாவட்டத்தில் உள்ள மண்டப்பள்ளி என்ற இடத்தில் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. இந்த கட்டிடத்தை திறந்து வைக்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சென்றார். அப்போது ஒரு குடியிருப்பின் நுழைவுவாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.;
இதை திறந்து வைப்பதற்காக முதல்-மந்திரியும், உயர் அதிகாரிகளும் வந்தனர். ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் ரிப்பனை வெட்ட கத்தரிக்கோல் கொண்டு வர மறந்து விட்டனர். கத்தரிக்கோலுக்காக சிறிதுநேரம் காத்திருந்த சந்திரசேகரராவ், தாமதம் ஆனதால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஆத்திரத்தில் ரிப்பனை பிடித்து இழுத்து குடியிருப்பை திறந்து வைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.