ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி செல்பி எடுத்தவர்கள் உட்பட 28 பேர் பலி

ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் செல்பி எடுத்தவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.;

Update:2021-07-12 09:16 IST


புதுடெல்லி,

வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.  10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன.

இவற்றில், 18 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.  அவர்களில் 7 குழந்தைகள் அடங்குவர்.  அவர்களில் ஜெய்ப்பூரில் ஆம்பர் கோட்டை அருகே மலை பகுதியில் செல்பி எடுத்து கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள்.  இதுதவிர 6 குழந்தைகள் உள்பட 21 பேர் காயமடைந்து உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பல பகுதிகளில் பெய்த கனமழையில் சிக்கி 2 இளைஞர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இவர்கள் தவிர உத்தரகாண்டில் மழைக்கு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்