கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-25 18:46 GMT
பானஜி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கோவாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,491ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,158 - ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்