இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-28 06:42 GMT


இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் படிப்படியக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என்பதால் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம்  இன்று  தெரிவித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,02,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்