வழி கேட்பது போல் அநாகரீகமாக நடந்து கொண்ட வாலிபர் ; துணிவுடன் எதிர்கொண்ட இளம் பெண்

ஒரு நிமிடம் திகைத்து போன பாவனா சுதாரித்துக்கொண்டு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் ஸ்கூட்டரின் பின் டயரை அப்படியே தூக்கியிருக்கிறார்

Update: 2021-08-03 05:32 GMT
கவுகாத்தி

அசாம் மாநிலம்  கவுகாத்தி நகரை  சேர்ந்தவர் பாவனா காஷ்யப், இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆள் நடமாட்டமில்லா  சாலை ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தார.அப்போது எதிரே பைக்கில்  வந்த ஒருவாலிபர் வாகனத்தில் இருந்தவாரே அவரிடம் வழிகேட்டிருக்கிறார்.

அந்த இளைஞர் கேட்ட விலாசம் தனக்கு தெரியாது எனவும் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் என அவர் கூறியிருக்கிறார். அந்த சமயம் திடீரென பாவனா காஷ்யப்பின்பிடம் அவர்  அறுவறுப்பான முறையில் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு நிமிடம் திகைத்து போன பாவனா சுதாரித்துக் கொண்டு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் ஸ்கூட்டரின் பின் டயரை அப்படியே தூக்கியிருக்கிறார், இதனால் அந்த நபரால் மேற்கொண்டு வாகனத்தில் செல்ல முடியவில்லை.

இப்படியே சுமார் 30 நொடிகள் போராடிய பாவனா ஒருவழியாக இருசக்கர வாகனத்துடன் அந்த நபரை அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். தனது ஸ்கூட்டி சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால் அந்த நபரால் உடனடியாக அங்கிருந்து தப்ப முடியாமல் போனது. வேறு வழியில்லாமல் அவர் அங்கே சிக்கிக்கொண்டார்.

இதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பாவனாவுக்கு ஆதரவு தெரிவிக்க நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுக்கத்தொடங்கினார்.

அநாகரீகமாக நடந்த  நபரின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும் அவர் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுவிடுமாறும் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும் போலீசாருக்கு  தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மதுசனா ராஜ்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தார் பாவனா.

பாவனா அத்துமீறி நடந்து கொண்ட நபரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் அவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் . மேலும், பாவனாவிடம் அத்துமீறிய நபர் மீது தற்போது டிஸ்புர் போலீஸ் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்