‘இஸ்கான்’ நிறுவனர் நினைவாக 125 ரூபாய் நாணயம்; மோடி வெளியிட்டார்

‘ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என அழைக்கப்படும் ‘கிருஷ்ண நினைவுக்கான சர்வதேச சமூகம்’ (இஸ்கான்) என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீல பக்திவேதாந்தா சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-02 02:00 GMT
இதையொட்டி அவரது நினைவாக 125 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இஸ்கான் நிறுவனத்தின் பணிகள் மற்றும் சேவைகளை பாராட்டினார். இந்திய மரபுகள் மற்றும் மதிப்பீடுகளின் சர்வதேச விளம்பர தூதுவராக இந்த அமைப்பு செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

சுவாமி பிரபுபாதர், கிருஷ்ணரின் அசாதாரண பக்தர் மட்டுமின்றி, இந்தியாவின் பக்தராகவும் இருந்தார் எனக்கூறிய மோடி, இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது இயக்கத்தின் பங்கேற்பையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்