அடல் மிஷன் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலுள்ள நகரங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் ‘அம்ருட் 2.0’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-10-12 19:47 GMT
புது டெல்லி,

‘புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்  2.0 (அம்ருட் 2.0) ’  திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம்  4,378  வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 500 அம்ருட் திட்ட நகரங்களில் 100 சதவீதம் வீட்டுக்கழிவுகளை மேலாண்மை செய்வது உறுதிப்படுத்தப்படும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்ருட் 2.0 திட்டத்துக்கான செலவு 2 லட்சத்து 77 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 2021-22ம் நிதி ஆண்டிலிருந்து 2025-2026 வரையிலான நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பங்காக 76 ஆயிரத்து 760 கோடி இந்த திட்டத்திற்காக செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்