ஸ்ரீநகர் தொழிலதிபர்கள் என்கவுண்டர்: விசாரணைக்கு உத்தரவு

ஸ்ரீநகர் இரண்டு தொழிலதிபர்கள் கொல்லப்பட்ட என்கவுண்டர் விவகாரத்தில் கூடுதல் மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-11-18 09:21 GMT
ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் ஹைதர்போராவில் இரண்டு தொழிலதிபர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு தொழில் அதிபர்களும் அப்பாவிகள் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.  அதே நேரத்தில் இருவரும் "பயங்கரவாதிகளின் கூட்டாளிகள்" என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் சர்ச்சைக்குரிய போலீசாரின்  நடவடிக்கை குறித்து கூடுதல் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்துவார். என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறியதாவது:-

 பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பங்களின் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம். ஏதேனும் தவறு நடந்திருந்தால் திருத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். போலீஸ் விசாரணையில் என்ன தவறு நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படும். ஹைதர் போரா என்கவுண்டரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். நாங்கள் மக்களின் பாதுகாப்பிற்காக இருக்கிறோம், விசாரணையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்