உத்தரபிரதேசத்தில் மேலும் 3 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் விலகல்

உத்தரபிரதேசத்தில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர்.

Update: 2022-01-11 18:45 GMT
லக்னோ, 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும்நிலையில், ஆளும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மாதுரி வர்மா, ராதாகிருஷ்ண சர்மா ஆகியோர் பா.ஜனதாவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேச மந்திரி சுவாமி பிரசாத் மவுர்யா நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் சமாஜ்வாடி கட்சியில் சேருவார் என்று கருதப்படுகிறது. 

அவர் விலகிய சில மணி நேரத்தில், பிரஜேஷ் பிரஜாபதி, பகவதி பிரசாத் சாகர், ரோஷன் லால் வர்மா ஆகிய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர். சுவாமி பிரசாத் மவுர்யா தான் தங்கள் தலைவர் என்றும், அவரது வழியை பின்பற்றுவோம் என்றும் அவர்கள் கூறினர். 

இவர்கள் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்தபடியாக அவர்கள் சமாஜ்வாடி கட்சியில் சேருவார்கள் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்