அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,642 பேர் கைது - மத்திய அரசு தகவல்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-20 13:16 GMT

புதுடெல்லி,

அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நடந்த போராட்டத்தில் ரெயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ரெயில்வே சொத்துக்களின் சேதம் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் அளித்த பதிலில், மத்திய ரெயில்வே, கிழக்கு ரெயில்வே மற்றும் தென்னக ரெயில்வே என 12 மண்டலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தென்னக ரெயில்வேயில் மட்டும் 1,051 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்