ரெயில் முன்பு பாய்ந்து 3 பேர் தற்கொலை

சிக்பள்ளாப்பூர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து 3 பேர் தற்கொலை செய்துகெண்டனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-01-10 01:49 IST

சிக்பள்ளாப்பூர்:

3 பேரின் உடல்கள் மீட்பு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா தொண்டபாவி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை 2 பெண்கள், ஒரு ஆண் இறந்து கிடந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செனறு பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ரெயில் தண்டவாளத்தில் கிடந்த 2 பெண்கள், ஆணின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கிவல்லை. எனினும், தற்கொலை ெசய்துகொண்டவர்கள் தம்பதி மற்றும் அவர்களது மகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்