சத்தீஸ்கரில் 33 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண்
சத்தீஸ்கரில் 33 நக்சலைட் பயங்கரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.;
கோப்புப்படம்
சுக்மா,
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சலைட் பயங்கரவாதிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக 'ஜன் தர்ஷன்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் டப்பமர்காவில் நடந்த முகாமில் 33 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
அவர்களில் 3 பேர், தலைக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்களாவர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான சில வசதிகள் போலீஸ் தரப்பில் செய்து தரப்படுகிறது.