சிவமொக்காவில் கைதான பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த பழ வியாபாரி கைது

சிவமொக்காவில் கைதான பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-26 20:39 GMT

பெங்களூரு:

ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 2 பேரை சிவமொக்கா போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கைதான 2 பேரின் போலீஸ் காவலும் நிறைவு பெற்றது. இதனால் அவர்களை சிவமொக்கா 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 2 பேரிடமும் மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவர்களை தங்களது காவலுக்கு அனுப்பி வைக்கும்படி போலீசார் நீதிபதியிடம் கேட்டு கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 2 பேரின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார். இதற்கிடையே கைதான 2 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது கொப்பல் மாவட்டம் கங்காவதியை சேர்ந்த ஷபீர் என்ற பழ வியாபாரி தங்களிடம் நிரந்தர தொடர்பில் இருந்ததாக கூறி இருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு கங்காவதிக்கு சென்ற சிவமொக்கா போலீசார் ஷபீரை கைது செய்தனர். பின்னர் அவரை சிவமொக்காவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்