பாகிஸ்தானில் இருந்து கொச்சி அருகே சென்ற கப்பல்... மடக்கி பிடித்த இந்திய படை

முதற்கட்ட விசாரணையில் ஹெராயின் பாகிஸ்தானிலிருந்து ஈரானுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

Update: 2022-10-07 09:02 GMT

கொச்சி,

பாகிஸ்தானிலிருந்து இந்திய கடல் வழியாக ஈரானுக்கு படகில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், 6 பேரை கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் ஆயிரத்து 200 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சென்ற படகை நிறுத்தி, இந்தியா கடலோரா பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது படகில் 200 கிலோ ஹெராயின் கடத்தப்படுவது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படையினர், படகிலிருந்த பாகிஸ்தான் மற்றும் ஈரானியர்கள் 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொச்சி அழைத்துவரப்பட்டு, தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து 6 பேரிடமும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவும், இந்திய கடலோர காவல்படையும் விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஹெராயின் பாகிஸ்தானிலிருந்து ஈரானுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்