திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

வாலிபர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த இளம்பெண், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.;

Update:2024-03-18 07:02 IST

நவிமும்பை,

மராட்டிய மாநிலம் நவிமும்பை கோபர்கைர்னே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, தானே மாவட்டம் பயந்தர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு வாலிபர் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். மேலும் வாலிபர் வேறொரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்தார்.

இதுபற்றி அறிந்த கர்ப்பம் ஆன இளம்பெண் தட்டிக்கேட்டதோடு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். இதற்கு வாலிபர் மறுப்பு தெரிவித்ததோடு, கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் வாலிபர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்