பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை - ஆந்திர அரசு உத்தரவு

பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-08-29 02:54 IST

விஜயவாடா,

ஆந்திராவில் பள்ளி வகுப்பறைகளில் செல்போன்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை அரசு நேற்று வெளியிட்டது.

அதன்படி மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்து செல்லலாம், ஆனால் வகுப்பறைகளில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.

வகுப்பறைக்கு செல்லுமுன் ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு ஆந்திர அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அரசு, இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த உத்தரவில் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்