நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் மாநிலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு

நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய கூடிய மாநிலங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

Update: 2022-06-19 16:57 GMT



புதுடெல்லி,



இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியின்படி, வடகிழக்கு இந்தியாவில் தீவிர மழை தொடர்ந்து பெய்யும். மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமிலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்.

வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் 2 முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசம், கில்கித்-பல்திஸ்தான், உத்தரகாண்ட், லடாக் மற்றும் முசாபராபாத் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு இமயமலை பகுதியிலுள்ள மாநிலங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.

பஞ்சாப், சண்டிகர், டெல்லி மற்றும் அரியானாவில் பரவலான மழையும், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா, டெல்லி, சண்டிகர் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஜூன் 20ந்தேதியும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூன் 19ந்தேதி முதல் ஜூன் 21ந்தேதி வரையும், பஞ்சாப்பில் ஜூன் 20ந்தேதி மற்றும் ஜூன் 21ந்தேதி ஆகிய நாட்களிலும் கனமழை பெய்ய கூடும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசத்தில் ஜூன் 21, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பாவில் ஜூன் 19, ஜூன் 20 மற்றும் ஜூன் 23 ஆகிய 3 நாட்களிலும், சத்தீஷ்காரில் ஜூன் 19 முதல் ஜூன் 23 வரையும் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மித அளவிலான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்