டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு வெற்றி

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஒரு எம்.எல்.ஏ மட்டும் எதிராக வாக்களித்தார்.

Update: 2024-02-17 08:59 GMT

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் நேற்று திடீரென நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தங்களை பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக 2 எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் கூறினர்.

கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார், அவரது அரசு கவிழும் என்று கூறியதாகவும் தெரிவித்தனர். இதைப்போல 21 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் எந்த எம்.எல்.ஏ.வும் அணி மாறவில்லை' என தெரிவித்தார்.கெஜ்ரிவால் கொண்டு வந்த இந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் கெஜ்ரிவால் தனக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை காட்டினார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஒரு எம்.எல்.ஏ மட்டும் எதிராக வாக்களித்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 8 பேர் பல்வேறு காரணங்களுக்காக அவைக்கு வரவில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்