பசவன மலையில் லாரி கவிழ்ந்தது; பெண் பலி

ஹலகூர் அருகே பசவன மலையல் லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-12 22:08 GMT

ஹலகூர்:

ஹலகூர் அருகே பசவன மலையல் லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்தது

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே பசவன மலை அமைந்துள்ளது. இந்த மலை மீது மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மலவள்ளி அருகே தம்மடஹள்ளியை சேர்ந்த 32 பேர் பசவன மலையில் உள்ள மாரம்மா கோவிலுக்கு லாரியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் லாரியில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், லாரி மலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

பெண் சாவு

இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளிடையே சிக்கி தம்மடஹள்ளியை சர்ந்த மங்களம்மா (வயது 50) என்பவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் படுகாயம் அடைந்த 30 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் பலியான மங்களம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மலவள்ளி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு பசவன மலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் பள்ளத்தில் விழுந்து 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்