சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் 10 வயது சிறுமி தற்கொலை

சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுத்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-24 02:08 GMT

கோப்புப்படம் 

ஜபல்பூர்,

மத்திய பிரதேசத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜபல்பூரில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், அந்த மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பெடகாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தன்னுடைய தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சிறுமி வற்புறுத்தி கேட்டும் தாய் அழைத்துச் செல்ல மறுத்ததால், விரக்தியடைந்த சிறுமி நேற்று மாடிக்கு சென்று கதவு திரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தன்வந்திரி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்