தண்ணீரில் கண்டம்... ஆளை காலி செய்த தேனீ; இப்படி எல்லாம் நடக்குது...!!

ஹிரேந்திரா சிங் வாந்தி எடுத்ததில் அந்த தேனீ வெளியே வந்து விழுந்து விட்டது என்று குலஸ்தே கூறியுள்ளார்.

Update: 2023-12-09 11:17 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பெரேசியா பகுதியில் வசித்து வந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). கடந்த புதன் கிழமை இரவில் அவர் வீட்டில் இருந்தபோது, தாகம் தணிவதற்காக ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்து குடித்துள்ளார்.

ஆனால், குடித்த சிறிது நேரத்தில் அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. அந்த தண்ணீரில் தேனீ ஒன்று கிடந்துள்ளது. அது, அவருடைய நாக்கை கடித்ததுடன், உணவு குழாய்க்குள்ளும் புகுந்து கடித்து வைத்து இருக்கிறது.

இதனால், அவருக்கு எரிய ஆரம்பித்துள்ளது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்து விட்டார். இதனை காவல் ஆய்வாளர் நரேந்திரா குலஸ்தே உறுதிப்படுத்தி உள்ளார். சிகிச்சையின்போது, ஹிரேந்திரா வாந்தி எடுத்ததில் அந்த தேனீ வெளியே வந்து விழுந்து விட்டது என்றும் குலஸ்தே கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்