உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு - மந்திரி ராஜ்நாத் சிங்

ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-29 13:40 GMT

புதுடெல்லி,

"பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின்" கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக இருந்தது.

இந்த நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின்" கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்