ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் உட்பட இருவர் கைது

ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-09-24 10:43 IST

ஐதராபாத்,

ஐதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (H-NEW) மற்றும் லாங்கர் ஹவுஸ் போலீசார், வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரையும் மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல் செய்பவர் ஒருவரையும் நேற்று கைது செய்தனர்.

தகவலின்படி, கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் கானாவை (ஆப்பிரிக்கா) சேர்ந்தவர் என்றும் பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து 17 கிராம் எம்.டி.எம்.ஏ, 2 செல்போன்கள் மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தும் ஆறு பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் பலரை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்