மராட்டியத்தில் ஆட்டோ மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

மராட்டியத்தில் ஆட்டோ மீது மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2022-11-08 05:08 IST

ராய்கர்,

மராட்டிய மாநிலம் ராய்கரில் நேற்று இரவு 3 மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த ஆட்டோ மீது மணல் ஏற்றிச் சென்ற டம்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளதாக தொழில்துறை மந்திரி உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்