ஆமதாபாத்: ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்

ஆமதாபாத்தில் ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-25 04:43 GMT

கோப்புப்படம் 

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த இரண்டு மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மணிநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மாஸ்டர் ஆப் சர்ஜரி படிக்கும் சீனியர் மாணவர்கள், முதலாமாண்டு படிக்கும் ஜூனியர் மாணவர்களிடம் மருந்துச்சீட்டு எழுதுவது உள்ளிட்ட பணிகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியும், அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தியும் ராகிங் செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி ஜூனியர் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கல்லூரி முதல்வரை  சந்தித்து புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக கல்லூரி கவுன்சில் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ராகிங் செய்த 4 சீனியர் மாணவர்களையும் இடைநீக்கம் செய்ய கவுன்சில் முடிவெடித்தது. அதன் அடிப்படையில், கல்லூரி முதல்வர் டாக்டர். திப்தி ஷா, ஒருவரை 2 ஆண்டுகளும், மற்றொருவரை ஒரு ஆண்டும், மற்ற இருவரை 25 நாட்களும் இடைநீக்கம் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்