உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரு ரெயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-02-16 14:29 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரெயில்கள் மோதிக்கொண்டதால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இந்த விபத்து காரணமாக லக்னோ-வாரணாசி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரெயில்களை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்