ஜி20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு
இந்தியாவிடமிருந்த ஜி20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது.
பிரதமர் மோடிக்கு மரக்கன்றுகள் வழங்கிய இந்தோனேசிய, பிரேசில் அதிபர்கள்
ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ மரக்கன்றுகள் வழங்கினர்.
ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தொடக்கம்
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சிமாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.
இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஜி20 கூட்டமைப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டார்...!
ஜி20 உச்சிமாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று வியட்நாம் புறப்பட்டு சென்றார். உச்சிமாநாட்டின் 2ம் நாளான இன்றைய கூட்டத்தில் ஜோ பைடன் பங்கேற்கவில்லை.
காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மரியாதை
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மலர் வளையம் வைத்து உலக நாடுகளின் தலைவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை தந்தார். அவரை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லாங், ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அலில் அசொமனி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ், கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ, ஐரோப்பிய யூனியன் தலைவி உர்லுலா வென் டர் லியன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ், தென்கொரியா தலைவர் யான் சுக், ஜெர்மனி பிரதமர் ஒலோப், இத்தாலி பிரதமர் மிலோனி, துருக்கி அதிபர் எர்டோகன், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, சீன பிரதமர் லி குவாங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், தென் ஆப்பிரிக்க அதிபர் செரில் ரமப்சா வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மொரிஷியஸ் பிரதமர் வருகை
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த மொரிஷியஸ் பிரதமர் பிரவீன்குமாரை பிரதமர் மோடி கதர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு எகிப்து அதிபர் வருகை
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த எகிப்து அதிபர் அப்துல் பஹத் அல் சிசியை பிரதமர் மோடி கதர் சால்வை அணிவித்து வரவேற்றார்.