உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2023-12-21 12:51 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மௌனத் பஞ்சன் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், சம்பவத்தை வீடியோவாக எடுத்து, நடந்ததை யாரிடமாவது சொன்னால் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார். சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்