திருப்பதி மலைகளில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

கீழ் திருப்பதி மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

Update: 2022-12-11 18:07 GMT

திருப்பதி,

மாண்டஸ் புயல் காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கீழ் திருப்பதி மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழியில் உள்ள அருவிகள் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவில் அருகே உள்ள அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு களித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்