கடலில் மூழ்கிய படகில் தத்தளித்த 5 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை

குஜராத்தின் போர்பந்தர் நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் படகு கடலில் மூழ்கியது.

Update: 2024-03-26 02:04 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் போர்பந்தர் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் பிரேம்சாகர் என்ற பெயரிலான இந்திய மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் சிக்கி கொண்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சி-161 என்ற எண் கொண்ட கப்பல் உடனடியாக சென்றது.

இதுபற்றி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உதவி கமாண்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி, போர்பந்தரில் இருந்து புறப்பட்டு சென்ற கப்பலில் இருந்த வீரர்கள், படகில் தத்தளித்த 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

அதன்பின் படகில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினர். பாதியளவு மூழ்கியிருந்த படகையும் மீட்டு, மற்றொரு மீன்பிடி படகுடன் இணைத்து, கரைக்கு கொண்டு செல்ல முயன்றனர். எனினும், 75 சதவீதம் அளவுக்கு படகில் நீர் தேங்கி, பாதிப்படைந்து இருந்தது. இதனால், போர்பந்தரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் படகு கடலில் மூழ்கியது.

படகில் இருந்த 5 பேரும் மீட்கப்பட்டு அவர்களுக்கு, மருத்துவ உதவியும் அளிக்கப்பட்டது. அவர்கள், போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டு, மீன்வள கூட்டமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்