எரிபொருள் கட்டணம் ரத்து: இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைப்பு

எரிபொருள் கட்டணம் சரிந்துள்ளதால் நேற்று முதல் இந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்பப்பெற்று உள்ளது.

Update: 2024-01-04 19:28 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்து வந்ததால் அதை இண்டிகோ நிறுவனம் டிக்கெட் கட்டணத்தில் கூடுதலாக வசூலித்து வந்தது. இது கடந்த அக்டோபர் 6-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

தற்போது விமான எரிபொருள் கட்டணம் சரிந்துள்ளதால் நேற்று முதல் இந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்பப்பெற்று உள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் குறைந்திருக்கிறது.

அதன்படி குறிப்பிட்ட வழித்தடங்களில் ரூ.1,000 வரை டிக்கெட் கட்டணம் குறைந்திருப்பதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்