ஜம்மு காஷ்மீர்: சமூக வலைதளங்களில் அரசை விமர்சனம் செய்த பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், அரசை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்ப

Update: 2023-02-24 18:49 GMT

கோப்புப்படம் 

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜோகிந்தர் சிங். இவர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சித்து சில கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் அரசின் கொள்கைகளை விமர்சித்தும், எதிர்மறையாக கருத்து தெரிவித்தும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது அடையாளத்தை மறைத்து (இரண்டு முகநூல் கணக்குகளில்) சமூக அரசியல் ஆர்வலர் என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடியை உருவாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின்படி, சமூக ஊடக தளங்களில் "கொள்கைகளை விமர்சிப்பது தொடர்பாக" அரசாங்க உத்தரவுகளை மீறியதற்காக திரு சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரசு ஊழியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்